இலங்கை: கெஹலிய உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
2014 ஆம் ஆண்டு ஊடக அமைச்சராக இருந்தபோது அரசியல் நோக்கங்களுக்காக 600 GI குழாய்களை வாங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது.
இருப்பினும், நீதிபதி விடுமுறையில் இருந்ததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்ற பதிவாளர் இன்று அறிவித்தார்.
அதன்படி, வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் முடிவு செய்தது.
(Visited 1 times, 1 visits today)