இலங்கை – வரிச்சலுகையுடன் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமா?
எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15.10) விளக்கமளித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.
எந்தவொரு வகையிலும் கட்டணச் சலுகைகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அமைச்சரவை தீர்மானம் உள்ளது.
ஆனால் தற்போது திடீரென வாகனங்களை இறக்குமதி செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் வரிச்சலுகையுடன் வாகனங்களை இறக்குமதி செய்யவில்லை.
ஆனால் இறக்குமதி வாகனங்களின் சரியான முறைமைக்கு உட்பட்டது. எங்களின் டொலர் தொகை வெளியேறாமல் இருக்க, சுங்கச் சலுகைகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவோம் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.