இலங்கை பேருந்து விபத்து – 44 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை – அதிகரிக்கும் மரண்ங்கள்

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த 44 பேரும் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
கொத்மலை பிரதேச வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் நேற்று அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
பேருந்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாகவே விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)