இலங்கை – உடலில் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு!

நேற்று சனிக்கிழமை (12) குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திபுர வீதியில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். .
உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடையவர் எனவும் 5 அடி 6 அங்குல உயரமுடையவரும் நீல நிற முழுக்கை சேட் மற்றும் காற்சட்டை அணிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 31 times, 1 visits today)