இலங்கை

இலங்கை – உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்

அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தினை இன்று (06) பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொதுமக்கள் நேற்று (05) வழங்கிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த ஆண் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண முடியாதவாறு அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் உயிரிழந்த நபர் தொடர்பாக தகவல்கள் எதுவும் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார் உயிரிழந்தவரை இனங்காணுவதற்கு பொதுமக்களிடம் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நீதிவானின் களப் பரிசோதனையின் பின்னர் பார்வையிட்டு அவர் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. மேலும் நுவரெலியா தடயவியல் பொலிஸ் பிரிவு மற்றும் வைத்திய அறிக்கையின் உதவியுடன் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய அக்கரப்பத்தனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!