இலங்கை: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவலுக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொக்கல மற்றும் மத்துகமவில் உள்ள அவரது இரண்டு வங்கிக் கணக்குகளை மூன்று மாதங்களுக்கு முடக்குமாறு குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பு மேல் நீதிமன்றிடம் கோரியிருந்தனர்.
அந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.





