சிம்பாப்வே அணியிடம் மோசமாக தோல்வியடைந்த இலங்கை
பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அந்தவகையில் முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.
சிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட்(Brian Bennett) 49 ஓட்டங்களும் ராசா(Raza) 47 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க(Wanindu Hasaranga) 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 95 ஓட்டங்கள் மட்டுமே பெற்று மோசமான ஆட்டத்தை பதிவு செய்துள்ளது.
இலங்கை அணி சார்பில் தசுன் ஷானக(Dasun Shanaka) 34 ஓட்டங்களும் பானுக ராஜபக்ஷ(Bhanuka Rajapaksa) 11 ஓட்டங்களும் பெற்றனர்.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் ரிச்சர்ட் ங்கரவா(Richard Ngarava) 2 விக்கெட்களும் பிரட் எவன்ஸ்(Brad Evans) 3 விக்கெட்களும் கைப்பற்றினர்.





