இலங்கை – சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்களின் மோசமான செயற்பாடு!
சுற்றுலா விசாவில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினரை தடுக்கும் பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுவதாகவும், அதனை அரசாங்கம் பிரச்சினையாக இனங்கண்டுள்ளதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம், மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொறிமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேலிய பிரஜைகள் தொடர்பில் SJB பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.





