இலங்கை: மக்களே அவதானம்! 16 மாவட்டங்களில் கடுமையான மின்னல் மற்றும் கனமழைக்கு எச்சரிக்கை
நாளை (நவம்பர் 20) காலை 08.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் பல மாவட்டங்களில் கடுமையான மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் கடுமையான மின்னலுடன் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.






