இலங்கை : சர்சையில் சிக்கிய அர்ச்சுனா இராமநாதன் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து சட்டத்தை அமல்படுத்துமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறும் நீதிமன்றம் அனுராதபுரம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனுக்கு எதிராக போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
மேலும் இது தொடர்பாக அனுராதபுரம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தனர்.
அதன்படி, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
(Visited 101 times, 1 visits today)