இலங்கை – அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம் : சந்தேக நபர் கைது!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் கல்நேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை இரவு நிபுணத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த 32 வயது வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நபரைப் பிடிக்க பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
சந்தேக நபர் கல்நேவ பிரதேசத்தை சேர்ந்த கிரிபந்தலகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் முன்னர் வேறு ஒரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியரை தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்ற 34 வயதுடைய சந்தேக நபர் இன்று கல்நேவ பிரதேசத்தில் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.