இலங்கை: சட்டவிரோதமாக ஒன்றுசேர்க்கப்பட்ட மேலும் ஒரு சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு
மேல்மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொல்கசோவிட்ட கேரேஜ் ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டிச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சொகுசு வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், லேண்ட்ரோவர் எஸ்யூவி, ஒரு சேஸ், நான்கு டயர்கள் மற்றும் பழைய இயந்திரம் என்பன மஹரகம பிரதேசத்தில் உள்ள பௌத்த பிக்கு ஒருவரால் கொண்டுவரப்பட்டதாக கேரேஜ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வாகனத்தின் உதிரிபாகங்கள் பழுதுபார்ப்பதற்காக அவ்வப்போது கொண்டு வரப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வாகனத்தை கேரேஜுக்கு வழங்கியதாக நம்பப்படும் குறித்த பௌத்த பிக்குவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சொகுசு வாகனம் கெஸ்பேவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.