இலங்கை : ஆன்லைன் சட்டம் குறித்து வெளியான மற்றுமோர் அறிவிப்பு!

ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை அமல்படுத்த இன்னும் ஒரு மாதம் ஆகும் என நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான திருத்தங்கள் பொது பாதுகாப்பு அமைச்சகத்தால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரான் அலஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், அமைச்சரவை சபை திருத்தங்களை முன்வைக்க தீர்மானித்தது.
அமைச்சரவையில் 30க்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்தார். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு.
சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய புதிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சமீப நாட்களாக, பல தரப்பினரும் இந்த சட்டத்தின் பல பிரிவுகளை விமர்சித்துள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)