இலங்கை : இதுவரையில் 75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
இலங்கைக்கு 75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று (29) காலையுடன் அதற்கான அனுமதி நிறைவடைந்துள்ளதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
32,000 மெற்றிக் தொன் கச்சா அரிசி எனவும், 43,000 மெற்றிக் தொன் நெல் அரிசி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட காலத்தை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி கடந்த 26ம் திகதி முதல் மீண்டும் அரிசி அகற்றும் பணியை சுங்கத்துறையினர் தொடங்கினர்.
கடந்த 27ஆம் திகதி காலை வரை 72,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தினூடாக அகற்றப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விரைவாக விடுவிக்க உணவு பரிசோதகர்கள் மற்றும் தாவர தனிமைப்படுத்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சுங்க திணைக்களம் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுங்கப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் திரு.சிவலி அருக்கொட தெரிவித்தார்.