இலங்கை: உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
 
																																		நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 8 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
