இலங்கை: எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும், எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்;
எரிசக்தி துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கு ஒரு சுயாதீனமான ஒழுங்குமுறை அமைப்பின் அவசியத்தை கண்டறிந்துள்ளதாகவும் அதன் நோக்கம், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள், எல்பிஜி, எல்என்ஜி மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் தரம், விநியோகப் போட்டி மற்றும் விலைகளை ஒழுங்குபடுத்துவதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)





