இலங்கை: சீமெந்து விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
சீமெந்து மீதான செஸ் வரியைக் குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் சீமெந்தின் விலை ஒரு ரூபாவால் குறைக்கப்படும்.
இதனால் ஒரு மூடை சீமெந்து விலை 100 ரூபாவால் குறையும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு, கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)