இலங்கை

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இருதரப்பு சந்திப்பு

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச தகவல் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் அழைப்பின் பேரில் நாட்டு வருகை தந்துள்ள ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடல்  பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் உப செயலாளர் ஓமலே விளாடிமிரோவிச் தலைமையில் ரஷ்யாவின் தூதுக்குழுவினர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், இதன்போது இரு நாட்டு பாதுகாப்புகள் மற்றும் இலங்கைக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பலப்படுத்தவும், அதற்கு ரஷ்யா வழங்கும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும், மேலும் சர்வதேச தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பின் போது நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்