இந்தியாவில் இருந்து அதிக அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை
இந்தியாவிலிருந்து அதிக அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென இந்திய ஆய்வுத் தரவுகளை வெளியிடும் த இன்டியன் இன்டெக்ஸ் என்ற எக்ஸ் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவிடம் இருந்து இலங்கை 95.8 சதவீத அரிசியை இறக்குமதி செய்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. அதற்கமைய, இந்தியாவிடம் இருந்து ஈரான் 99.4 சதவீத அரிசியை இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிக நாடுகள் இந்தியாவின் அரிசியை நம்பியுள்ளதாகவும் த இன்டியன் இன்டெக்ஸ் என்ற எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)





