சிறையிலுள்ள 43 பாகிஸ்தானிய கைதிகளை விடுவிக்க இணக்கம் வெளியிட்டுள்ள இலங்கை
பாகிஸ்தானும் இலங்கையும் தங்கள் இருநாடுகளையும் சேர்ந்த கைதிகளை அவர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப உடனடி நடவடிக்கை எடுக்க ஒப்புக்கெண்டுள்ளன.
இதன்படி, இலங்கை சிறையில் உள்ள 43 பாகிஸ்தானிய கைதிகள் பாகிஸ்தானுக்குக் கொண்டுவரப்படுவர். இந்த இணக்கம் பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ரவிந்திர சந்திரா ஸ்ரீவிஜய் குணரத்னே, பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் மோஹ்சின் நக்வி ஆகியோருக்கு இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.
இவ்விருவரின் சந்திப்பில் இருதரப்பு அக்கறைக்குரிய அம்சங்களும் இருதரப்பு உறவை மேம்படுத்துவதும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன. இதன்தொடர்பில், பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பதென இருதரப்பினரும் முடிவு செய்தனர்.
இலங்கையில் உள்ள 43 சிறைக் கைதிகளை திரும்பக் கொண்டுவருவது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தானிய உள்துறை அமைச்சு இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளது.