இலங்கை: புலமைப்பரிசில் பரீட்சை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
அண்மையில் முடிவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தனையால் வினாத்தாள் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இந்த மனுக்கள் இன்று (11) எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனுக்கள் அழைக்கப்பட்டன.
3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முறையாக நிறைவுறாததால் மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
இந்த மூன்று மனுக்களும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மனு கடந்த முறை அழைக்கப்பட்ட போது, முன்கூட்டியே வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளை உள்ளடக்கிய முதல் வினாத்தாளுக்கான மறு பரீட்சையை நடத்த வேண்டாம் என அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மேலும் கசிந்ததாக கூறப்படும் மூன்று வினாக்களுக்கும் பரீட்சையில் தோற்றிய ஒவ்வொரு மாணவருக்கும் இலவச புள்ளிகளை வழங்குமாறு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார்.