இலங்கை – தீர்மானத்திற்கு மாறான செயல் ; அபேகுணவர்தனவை நீக்கியது SLPP

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையிலிருந்தும் தேசிய அழைப்பாளர் பதவியிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் தீர்மானத்திற்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் மற்றுமொரு வேட்பாளரை ஆதரித்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அபேகுணவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அபேகுணவர்தனவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமை மற்றும் கட்சியின் ஏனைய அனைத்து பதவிகளில் இருந்தும் இடைநிறுத்துவதற்கு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)