இலங்கை: இரு இளைஞர்களால் பெண்ணொருவர் கொலை?
சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய பகுதியில் உள்ள வீடொன்றில் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 35 வயதுடைய பெண்ணொருவர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு மதுபான விருந்து ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 மற்றும் 24 வயதுடைய இரு சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





