இலங்கை : கொழும்பில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை’!
கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் முதலைகள் உலா வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் அவற்றை பயன்படுத்தும் போது அவதானமாக செயற்படுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொல்கொட ஆற்றில் முதலை உலாவும் காணொளி தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பொல்கொடா ஆறு முதலைகளின் வாழ்விடமாகும், மேலும் கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் ஓடைகளில் அதிக எண்ணிக்கையிலான முதலைகள் வாழ்கின்றன.
தியவன்னாவ, பொல்கொட ஏரி தெற்கு மற்றும் களனி கங்கை ஆகியவை நீண்ட காலமாக முதலைகளின் வாழ்விடங்களாக காணப்படுகின்றன.
இது ஒரு பொதுவான சம்பவம், மக்கள் இதைப் பார்க்கும்போது மட்டுமே இது குறித்து பேசுகிறார்கள். எனவே, இந்த நீரோடைகளில் நடந்து செல்லும் போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டார்.