இலங்கை – ஜாஎல பகுதியில் குற்றவாளியை பிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

ஜாஎல பிரதேசத்தில் கால்வாயில் விழுந்து தப்பிச் சென்ற நபர் ஒருவரை கைது செய்வதற்காக நீரில் இறங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரை கைது செய்ய பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று சென்ற போது அவர் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், அவரை பிடிக்க 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கால்வாயில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 18 times, 1 visits today)