இலங்கை: நிரந்தர வீடு இல்லாததால் மரக்கிளையில் வசிக்கும் குடும்பம்
அநுராதபுரம் மாவட்டத்தின் மஹாவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தடியில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று நிரந்தர வீடு இல்லாததால் வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாங்கள் வாழ்வதற்கு பல்வேறு சிரமங்களுக்கு எதிராக போராடி வருவதாகவும், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தனது குடும்பத்திற்கு நிலையான வசிப்பிடமோ அல்லது நிரந்தர வருமானமோ இல்லை எனவும், மரத்தில் குடிசை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் எஸ்.எச்.சுசந்த குமார தெரிவித்துள்ளார்.
“காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பிரதேசம் இது. கடைசி முயற்சியாக மரத்தில் இந்தக் குடிசையைக் கட்டினேன். மரத்தின் அடிவாரத்தில் ஒரு சிறிய சமையலறை உள்ளது, நாங்கள் எங்கள் உணவைத் தயாரிப்பதற்காக மட்டுமே குடிசையிலிருந்து இறங்குகிறோம். நாங்கள் எங்கள் உணவை சீக்கிரமாகத் தயாரித்து இரவைக் கழிக்க குடிசைக்குள் நுழைகிறோம். எனது மூத்த மகனுக்கு 18 வயது, இளையவருக்கு ஐந்து வயது. என் மகளுக்கு பதினோரு வயது. எனது குடும்பத்தை பராமரிக்க, நான் ஒரு கூலி தொழிலாளியாக அற்ப சம்பளம் பெறுகிறேன், ”என்று அவர் கூறினார்.
இவர்கள் முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும், உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தாங்கள் இடம் மாறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் இரண்டு அறைகளையாவது கட்டித் தர வேண்டும் என்பதே அவர்களின் ஒரே வேண்டுகோள் என்றும் அவர் கூறினார்.
நன்றி: dailymirror.lk