இலங்கை- தெல்தெனியவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு
																																		தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதமஹனுவர, கல்லேவத்தை பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்மேட்டின் கீழ் சிக்கி 16 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 04.30 மணியளவில் மண்மேடு இடிந்து வீழ்ந்து வீடொன்றின் சுவருக்கும் மண்ணுக்கும் இடையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் சிக்கிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டு மெதமஹனுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 61 வயதுடைய பெண்ணும் 14 வயது சிறுவனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(Visited 4 times, 1 visits today)
                                    
        



                        
                            
