இலங்கை: 87,000 மாணவர்கள் இணையவழியூடாக விண்ணப்பம்!
இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்காக 87,000 மாணவர்கள் இணையவழியூடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை தெரிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவடைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்குரிய அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை அடுத்த மாத இறுதிக்குள் அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த மேலும் தெரிவித்தார்.
74 நாட்கள் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை அடுத்த சில வாரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் உடவத்த மேலும் தெரிவித்தார்.