இலங்கை: கடந்த 24 மணிநேரத்தில் 8000 போக்குவரத்து வழக்குகள் பதிவு
விசேட போக்குவரத்து நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் உட்பட மொத்தம் 8,747 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் கீழ் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை பண்டிகை காலங்களில் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் உயிரிழக்கும் வீதி விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பயணிகள் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய சாலை விபத்துகளைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.