இலங்கை – காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுமி பலி
ஹம்பாந்தோட்டை சீனிக்கு கால பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காட்டு யானை தாக்கியதில் எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் தந்தை பலத்த காயங்களுடன் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தந்தை தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகில் வந்த யானை அவரைத் தாக்க முயன்றது. காட்டு யானையிடமிருந்து தப்பிக்க தந்தை வீட்டை நோக்கி ஓடினார், தந்தையைப் பின்தொடர்ந்து வந்த காட்டு யானை சிறுமியைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 1 times, 1 visits today)