இலங்கை: லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டில் நடந்த 80 சோதனைகளில் 67 பேர் கைது
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) கடந்த 9 மாதங்களில் 81 சோதனைகளை நடத்தி 67 நபர்களை லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அவற்றில் லஞ்சம் தொடர்பான 259 புகார்களும், ஊழல் தொடர்பாக 466 புகார்களும், சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது தொடர்பான 86 புகார்களும் பதிவாகியுள்ளன.
810 முறைப்பாடுகள் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலோ அல்லது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வராத காரணத்தினாலோ நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெறப்பட்ட புகார்களில், 124 கோப்புகள் வழக்குத் தொடரவும், 30 கோப்புகள் பதிவுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளன.





