செய்தி

இலங்கை: வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில் 16 வயது மாணவன் மரணம்

கடும் மழை காரணமாக தெல்தெனிய, மெடதும்பர, மொரகஹமுல பிரதேசத்தில் வீடொன்றின் மீது வீழ்ந்த மண் கரையில் புதையுண்ட 16 வயது மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் டபிள்யூ.ஏ.கயான் என்ற 16 வயது மாணவன் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் மண் மேட்டிற்கு கீழே உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்ததுடன், அண்டை அறையில் இருந்த அவரது தாத்தா பாட்டியும் மண்சரிவில் காயமடைந்து மெத மஹனுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. மெடதும்பர, மொரகஹமுல பிரதேசத்தில் பெய்த அடைமழை காரணமாக வீட்டின் மேலே இருந்த மண்மேடு ஒன்று மண் சரிவில் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மண்சரிவில் புதையுண்ட மாணவனை பிரதேசவாசிகள் மிகுந்த பிரயத்தனத்துடன் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!