இலங்கை : 24 மணித்தியாலங்களில் 1,554 சந்தேக நபர்கள் கைது

நள்ளிரவுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,554 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 1,554 சந்தேக நபர்களில் 82 பேரிடம் பிடியாணை உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் 590 கிராம் ஹெரோயின், 1 கிலோ 300 கிராம் ஐஸ், 6 கிலோ 330 கிராம் கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 62 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 65 times, 1 visits today)