இலங்கை – 15 வயது சிறுமி கர்ப்பம்: காதலன் மற்றம் தந்தையர்கள் பொலிஸாரால் கைது

பதினைந்து வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அந்த சிறுமியின் காதலன், அவளுக்கு ஆதரவளித்த சிறுமியின் தந்தை, காதலனின் தந்தை ஆகியோர் அத்திமலை பொலிஸாரினால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரின் தந்தை அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலையில் உள்ள வட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர்.
தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். அந்த சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.
அந்த சிறுமி இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். காதலன், சிறுமியின் வீட்டிற்கு சென்று கணவன்-மனைவியாக நடந்து கொண்டனர்.
சந்தேக நபரின் 52 வயதுடைய தந்தை, பெண்ணின் தந்தையான 42 வயதுடைய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
பொலிஸாரால், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.