காசாவை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் – 2.1 மில்லியன் மக்கள் ஆபத்தில்

காசாவை ஆக்கிரமிக்க இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், அங்கு வசிக்கும் 2.1 மில்லியன் மக்கள் ஏற்கனவே எதிர்கொள்ளும் மோசமான நிலைமையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளதெனன சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
இந்தப் பின்னணியில், காசா பகுதியில் உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் இருந்து ஹமாஸ் போராளிகளைத் தாக்குவதைக் காட்டும் ஒரு வீடியோவையும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஊடகங்களுக்கு வெளியிட்டன.
காசா நகர ஆக்கிரமிப்பின் இரண்டாம் கட்டம் ஆபரேஷன் கிதியோன் ரதங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
(Visited 3 times, 4 visits today)