இலங்கை

இடைக்கால கிரிக்கெட் குழு: விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய தீர்மானம்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டதாக அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த டுவிட்டர் பதிவில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!