இளம் வயதினரை தாக்கும் முதுகுத்தண்டு பிரச்சனை – அறிகுறிகள்
முதுகெலும்பு நம் உடலின் கட்டமைப்பை கட்டிக்காக்கும் முக்கிய அமைப்பாக உள்ளது. உடலின் மற்ற பகுதிகளை மூளையுடன் இணைக்கும் முக்கியமான வேலையை இது செய்கிறது.
முதுகெலும்பு நரம்புகள் மற்றும் தசைகளின் சிக்கலான வலையமைப்பாக உள்ளது.
நமது நடமாட்டம், உணர்வு மற்றும் உணர்வுகளின் அனுபவம் ஆகியவை இதனால் நடக்கின்றன. கழுத்தின் முதுகெலும்பை சர்வைக்கல் ஸ்பைன் என்றும் கூறுகிறோம். இது ஏழு வர்டிப்ரா அதாவது முதுகெலும்புகளைக் கொண்டுள்ளது. இவற்றுக்கு C1 முதல் C7 வரை பெயரிடப்பட்டுள்ளது.
இந்நாட்களில் பலருக்கு சர்வைகல் பிரச்சனை இருக்கின்றது. இதற்கு வாழ்க்கை முறை உட்பட பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக இதனால் அதிக பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. ஆனால், வயது அதிகரிக்கும் போது இதன் பிரச்சனைகளும் அதிகமாகலாம்.
கழுத்து முதுகெலும்புகள் உடையும் நிலை சர்வைக்கல் ஸ்பாண்டிலெசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் முதுகெலும்பில் பல வகையான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இவற்றில் சில பிரச்சனைகள் தீவிர பிரச்சனைகளாகவும் உருவெடுக்கலாம். சர்வைக்கல் ஸ்பாண்டிலெசிஸில் கவனம் செலுத்த வேண்டிய சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
பொதுவான அறிகுறிகள்
– கழுத்து வலி சர்வைக்கல் ஸ்பாண்டிலெசிஸில் மிகவும் பொதுவான அறிகுறியாகும். இந்த வலி அதிகமாகவோ அல்லது மந்தமாகவோ இருக்கலாம். இந்த வலி கழுத்திலிருந்து தலை, தோள்கள் மற்றும் கைகளுக்கு பரவக்கூடும்.
– கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை. இது கைகள், விரல்கள் மற்றும் முகத்திலும் உணரப்படலாம்.
– தசைகளில் பலவீனம் உண்டாவது முதுகுத் தண்டிலிருந்து தசைகளுக்கு செய்தியை அனுப்புவதில் ஒரு அடைப்பைக் குறிக்கலாம். இது கை அல்லது தோளில் பலவீனம் அல்லது கனமான உணர்வை ஏற்படுத்தும்.
– நடப்பதில் சிரமம்.
– சிறுநீர் கழிப்பதில் சிரமம்
– மலம் கழிப்பதில் சிரமம்
– சமநிலை அல்லது ஒருங்கிணைப்பில் பிரச்சனை
இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டாலும், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
சர்வைக்கல் ஸ்பாண்டிலெசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்
– முதுகுத் தண்டு மீது அழுத்தம் கொடுக்கப்படுவது
– முதுகுத் தண்டு மற்றும் நரம்புகள் மீது அழுத்தம் கொடுக்கப்படுவது.
– கீல்வாதம், மூட்டு வீக்கம் ஆகியவற்றின் தாக்கம் சர்வைக்கல் ஸ்பாண்டிலெசிஸ் மீது இருக்கலாம்.
– கீழே விழுதல், கார் விபத்துக்கள் அல்லது விளையாட்டு தொடர்பான காயங்கள் உட்பட பல காரணங்களால் இது ஏற்படலாம்.
– சிலர் பிறக்கும்போதே முதுகுத்தண்டு பிரச்சனையுடன் பிறக்கிறார்கள்.
தற்காப்பு நடவடிக்கைகள்
– ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மிக அவசியம். எடை அதிகரிப்பது முதுகுத்தண்டில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
– தினமும் உடற்பயிற்சி செய்தால், பெரிய அளவில் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
– எனினும், முறையான பயிற்சியாளரின் முன்னிலையில் இதை செய்ய வேண்டும்