பிரித்தானியாவில் வாகன ஓட்டிகளுக்கு சவாலாக வரும் வேக கெமராக்கள்!
பிரித்தானியாவில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப சந்தையில் மிகப் பெரிய சவாலாக இருப்பது வேக கெமராக்கள் தான். இந்த கெமராக்கள் அனைத்தும் வரும் ஒக்டோபர் மாதம் 2026 இற்குள் வர்ணம் தீட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வர்ணம் தீட்டினால் தொலைதூரத்தில் உள்ள அந்த கெமராக்களை பார்ப்பது கடினமாகிவிடும். ஆனால் அந்த கெமராக்கள் இலகுவாக எங்களை படம்பிடிக்கலாம்.
இதனால் சாலை விதிகளை மீறுவோர் துள்ளியமாக அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
ஓட்டுநர்களுக்கு அச்சமூட்டும் வகையில், 1,000 மீட்டர் தொலைவில் இருந்து வாகனத்தில் செல்லுபவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இது துள்ளியமாக கண்காணிக்கும்.
கோட்ஸ்வோல்ட்ஸில் உள்ள ஒரு காவல்துறையினரால் மொபைல் கேமரா வெளிப்படுத்தப்பட்டது.
வேகத் துப்பாக்கிகளால் ஓட்டுநர்கள் எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடிந்தாலும், புதிய கேமரா மிகத் தெளிவான வீடியோ காட்சிகளையும், வாகனங்கள் மற்றும் அவற்றில் இருக்கும் நபர்களின் ஸ்டில் புகைப்படங்களையும் உருவாக்குகிறது.