தைத்திருநாளை முன்னிட்டு இலங்கையில் விசேட வழிபாடுகள்
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் குருக்கள் தலைமையில் ஆலய வண்ணக்கர்மார்களுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
நாட்டு மக்கள் நோய்நொடியற்று, சமாதானத்துடன் வாழ வேண்டி, மாமாங்கேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனைகள் மற்றும் அபிடேகங்களும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த வழிபாடுகளில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் தைத்திருநாள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.