ஐரோப்பா

ஜெர்மனியில் வங்கி அட்டைகளை பயன்படுத்துவோருக்கு விசேட எச்சரிக்கை

ஜெர்மனி உட்பட பல நாடுகளில் வங்கி அட்டைகளை திருடி, மக்களின் பணம் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் உங்கள் வங்கி அட்டை திருடப்பட்டால், திருடர்கள் உங்கள் பணத்தை விரைவாக எடுத்துச் செல்லலாம். ஆனால் ஒரு எளிய செயன்முறை உங்கள் பணத்தை பாதுகாக்க உதவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் அட்டையில் 3 முறை தவறான பின் செலுத்தப்பட்டால் அது செயலிழந்து விடும்படியான ஒரு குறிப்பை வங்கியிடம் தெரியப்படுத்துங்கள். இதன்மூலம், உங்கள் கார்டை திருடியவர் 3 முறை தவறான பின்னை உட்செலுத்தினால் அது செயலிழந்து விடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பாக இருப்பதற்கு, யூகிக்க கடினமாக இருக்கும் வலுவான எண்ணை தேர்வு செய்யுங்கள். அதை எழுதவோ யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ ​​கூடாது. அத்துடன், உங்கள் பின்னை அடிக்கடி மாற்றுவது ஆபத்துகளை குறைக்கிறது.

எப்போதும் அதிகாரப்பூர்வ ஏடிஎம்களைப் பயன்படுத்துங்கள். வித்தியாசமான சாதனங்கள் ஏதும் ஏடிஎம்மில் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது அழைப்புகள் மூலம் அட்டை விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம். ஒன்லைன் வங்கிச் சேவைக்கு பொது வைஃபையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பெறமுடிந்த பணத்திற்கு வரம்புகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

சந்தேகத்திற்கிடமான செயலை விரைவாகக் கண்டறிய உங்கள் வங்கி அறிக்கைகளை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளுங்கள் என துறைசார் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!