Android கையடக்க தொலைபேசி பயனர்களுக்கு விசேட எச்சரிக்கை!
Android கையடக்க தொலைபேசி பயனர்களுக்கு தற்போது புதிய ஆபத்து வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் Android 13 OS வரை இயங்கி வரும் அனைத்து கையடக்க தொலைபேசிகளிலும் பாதுகாப்பு சிக்கல் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Android கையடக்க தொலைபேசிகளில் CIVN-2023-0194 என்கிற புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவந்துள்ளது.
இந்த பாதிப்பால் Android இயங்கு தளத்தில் பல பாதிப்புகள் ஏற்படும் எனப்படுகிறது. இதனால் ஹேக்கர்கள் Android சாதனங்களை அணுகுவதற்கான கேட்வே உருவாக்கப்பட்டு, எளிதில் உள்ளே நுழைந்து, முக்கிய தகவல்களை அணுக வழி வகுக்கும். ஹேக்கர்கள் தானாகவே உள்ளே நுழைவதற்கான அனுமதியை இது கொடுத்துவிடும். இதனால் Android பயன்பாட்டாளர்களுக்கு குறிப்பிட்ட ஆபத்து அதிகம் இருக்கிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு பழைய ஆண்ட்ராய்டு சாதனம் முதல், புதிய Android கையடக்க தொலைபேசிகள் வரை அனைத்து பதிப்புக்கும் பொருந்தும். மேலும் இந்த பாதிப்பில் இருந்து உங்கள் Android கையடக்க தொலைபேசி எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதற்கான சில செயல்முறையையும் CERT-In எனப்படும் இந்திய அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பாதிப்பை அதிக தீவிரம் கொண்ட ஹை லெவல் பிரச்சினையாக CERT-In மதிப்பிட்டுள்ளது. Android கையடக்க தொலைபேசி பிரேம் வொர்க், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள், சிஸ்டம், இமேஜினேஷன் டெக்னாலஜி, மீடியா டெக் மற்றும் குவால்காம் கூறுகள் உட்பட அனைத்துமே இதனால் பாதிக்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக ஆண்ட்ராய்டு 11,12,12L,13 போன்ற சாதனங்களில் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை இந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்க உடனடியாக உங்கள் சாதனத்திற்கு வழங்கும் அப்டேட்டுகளை உன்னிப்பாக கவனித்து, அதை இன்ஸ்டால் செய்யவும். பொதுவாகவே கையடக்க தொலைபேசி கொடுக்கப்படும் அப்டேட்டுகள் அதில் உள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காகவே கொடுக்கப்படுகிறது. எனவே கையடக்க தொலைபேசி பாதுகாக்க உடனடியாக புதிய அப்டேட் வந்திருக்கிறதா என சரி பார்த்து அப்டேட் செய்யவும்.