இலங்கை: சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை: 24 மணி நேரத்தில் 8,068 ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 2024 டிசம்பர் 23 முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 28 காலை 6:00 மணி முதல் டிசம்பர் 29 காலை 6:00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதியில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 8,068 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 401, கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டியதற்காக 53, அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக 48, பொது போக்குவரத்து விதிமீறல்களுக்கு 1,350, உரிமம் தொடர்பான குற்றங்களுக்கு 865, மற்ற குற்றங்களுக்கு 5,351.
இந்த நடவடிக்கை தொடரும் என அறிவித்துள்ள இலங்கை காவல்துறை, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.