இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இருக்கும் ஹோட்டல்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு
அறுகம்பே பிரதேசத்தைச் சூழவுள்ள பாதுகாப்பு அபாயம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் தென் மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் நேற்று சிறப்பு அறிவிப்பை விடுத்துள்ளது.
அத்துடன், பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால், இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளை உடனடியாக வெளியேறுமாறு கூறியுள்ளது.
இந்தப் பகுதிகளில் அறுகம்பே மற்றும் இலங்கையின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள கரையோரப் பகுதிகள் அடங்கும்.
இதன்படி, தென் மாகாணத்தில் உள்ள காலியின் நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்ட நிலையில் இது சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பிரதேசமாகும்.





