இலங்கை கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளது.
காலை 7.30 க்கு ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பில் சுகாதாரத்துறை வௌிக்கொணர்ந்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இதற்காக 16.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட செயன்முறையின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் உணவு தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)