இலங்கையில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களில் விவாதம் நடந்து வரும் பின்னணியில், பரீட்சையை ஒத்திவைப்பதற்காக மாணவர் குழுவொன்றும் கல்வி அமைச்சின் முன்பாக வந்து கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
ஆனால், இதுபோன்ற செயல்களை ஆசிரியர்களே செய்கிறார்கள் என்று அமைச்சர் ஒரு விழாவில் கூறினார்.
பரீட்சை விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ள பின்னணியில் அவ்வாறானதொன்று இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் தெரிவித்தார்.
(Visited 19 times, 1 visits today)