கனடாவில் தடை செய்யப்படவுள்ள TikTok பயனாளர்களுக்கு விசேட அறிவிப்பு
கனடாவில் TikTok நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனாலும் கனடியர்கள் TikTok செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கனடா கூறியது.
TikTokஇன் உரிமையாளரான ByteDance நிறுவனத்தின் செயல்பாடுகள் காரணமாகக் கனடாவில் தேசியப் பாதுகாப்பு ஆபத்துகள் ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கனடிய அரசாங்கம் தெரிவித்தது.
மக்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவது அவர்களது தனிப்பட்ட முடிவு என்றும் அரசாங்கம் கூறியது.
சென்ற ஆண்டு அரசாங்கச் சாதனங்களிலிருந்து கனடா TikTok செயலியைத் தடை செய்தது.
கனடாவின் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய வெளிநாட்டு முதலீடுகளைப் பரிசீலிக்கும் சட்டப்படி அந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
(Visited 66 times, 1 visits today)





