இலங்கை

தேர்தலில் வாக்களிக்க வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு விசேட அறிவிப்பு

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்புவோர் வாக்காளர் அட்டை இன்றியும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கமான பெப்ரல் இதனை அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பு இடம்பெறும் தினத்தன்று மதியம் நாடு திரும்பும் வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

தமது கடவுச்சீட்டை வாக்களிப்பு நிலையங்களில் காண்பித்து, குறித்த தினத்தில் நாடு திரும்பியதை உறுதிப்படுத்த முடியும்.

வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பின் எவ்வித தடையுமின்றி வாக்களிக்க முடியும்.

எனவே, எவரும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியாது என எண்ண வேண்டாம் என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்யாராச்சி தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்