ஐரோப்பா

பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு : பல்பொருள் அங்காடிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் வங்கி விடுமுறை நாளில், பல்பொருள் அங்காடிகள் சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளன.

வார இறுதியில் வங்கி விடுமுறையை ஒட்டியதாக மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே பல்பொருள் அங்காடிகளுக்கு வரவேண்டும் என நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சிலர் கடைகளை திறக்கும் நேரம் மாறுப்படும் என அறிவித்துள்ளனர்.

Aldi, Asda மற்றும் Tesco ஆகிய பல்பொருள் அங்காடிகள் கடைகளை மூடிய பிறகு யாரும் வரக்கூடாது என்பதற்காக அதன் திறக்கும் நேரத்தை அறிவித்துள்ளன.

சில இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் செயல்படும் நேரமும் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

வங்கி விடுமுறை தினமான திங்கள்கிழமை(06.05)  ஆல்டி கடைகள் வழக்கத்தை விட முன்னதாகவே மூடப்படும். இரவு 10 மணிக்கு மூடுவதற்கு பதிலாக, பெரும்பாலான கடைகள் இரவு 8 மணிக்கு மூடப்படும் என்று கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்தில் பெரும்பாலான கடைகளில் வழக்கமான காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!