நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறியதாக இந்தியாவில் சிறப்பு விசாரணை
இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.
நேற்றைய தினம் இனந்தெரியாத நபர்கள் இருவர் பாராளுமன்றத்தின் அடித்தளத்திற்குள் புகுந்து குழப்பமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் உள்ளுர் மட்டத்திலும் சர்வதேச அளவிலும் பேசப்பட்டு வருகின்றமை பலமான பின்னணியில் உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
அவர்கள் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இருவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் மற்றும் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு இந்திய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அரசாங்கம் பாராளுமன்றத்தின் பாதுகாப்பை மீறியுள்ளதாக அவர்கள் கடுமையாக குற்றம் சாட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதேவேளை, சந்தேகநபர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டில் கையொப்பமிட்ட பா.ஜ.க எம்.பி ஒருவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.