ஜெர்மனியில் சமூக உதவியில் வாழ்பவர்களுக்கு விசேட தகவல்
ஜெர்மனி நாட்டில் 35 லட்சம் பேர் சமூக உதவியை பெற்று வாழ்ந்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 19 லட்சம் பேர் வரை வேலை செய்யக் கூடிய உடல் ஆரோக்கியத்தில் இல்லை என்ற புள்ளி விபரமும் வெளியாகியுள்ளது.
அதனால் இவ்வாறானவர்களுக்கு சமூக உதவி பணம் தொடர்ந்தும் வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளையில் சமூக உதவி பணத்தில் தொடர்ந்தும் வாழ்கின்றவர்களுக்கு, சமூக திணைக்களமானது குறிப்பிட்ட வேலை கொடுத்து வேலைக்கு செல்லுமாறு பணிக்கும் பொழுது இவர்கள் வேலைக்கு செல்லாமல் விடும் பொழுது இவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் சமூக உதவி பணத்தை வழங்க கூடாது என்று பிரதான எதிர்கட்சியுடைய கூட்டு கட்சியான CSU கட்சியின் முக்கிய பிரமுகர் அரசாங்கத்திடம் வேண்டுதலை விடுத்து இருக்கின்றார்.
இது தொடர்பாக தமது கட்சியானது ஆலோசனை ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறி இருக்கின்றார்.
இந்நிலையில் இவ்வாறு வேலைக்கு செல்லாமல் இருக்கின்றர்களின் எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டு மட்டும் 1 83430 பேர் இருந்ததாகவும், இதேவேளையில் கொவிட் காலங்களில் இவ்வாறு சமூக உதவி திணைகளமானது வேலைக்கு செல்லாதவர்களில் மொத்தமாக 52174 பேருக்கு சமூக உதவி பணத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியதாக தெரியவந்து இருக்கின்றது.